ரூ. 18 லட்சம் மதிப்புள்ள ஹேண்ட்பேக்: அதிர வைத்த பாலிவுட் நடிகை !

பாலிவுட் நடிகை சோனம் கபூர் தொழில் அதிபர் ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் சோனம் கபூரை ரசிகர்கள் மும்பை விமான நிலையத்தில் பார்த்தனர். கோட், சூட், கூலிங் கிளாஸ் அணிந்திருந்த அவர் கையில் ஒரு ஹேண்ட்பேக் இருந்தது. Hermes Birkin பிராண்டை சேர்ந்த அந்த ஹேண்ட்பேக்கின் விலை ரூ. 18 லட்சம் மட்டுமே! பாலிவுட் பிரபலங்கள் லட்சக் கணக்கில் செலவு செய்து ஹேண்ட்பேக், ஷூ, உடை வாங்குவது வழக்கமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.