ரூ.2 கோடி விளம்பர படத்தை மறுத்த சாய்பல்லவி?

மலையாளத்தில் பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான சாய் பல்லவி, தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த நிலையில் சாய் பல்லவிக்கு அழகு சாதனப்பொருள் விளம்பர படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதற்கு சம்பளமாக ரூ.2 கோடி தருவதாக அந்த நிறுவனம் பேசியது. ஆனால் விளம்பர படத்தில் நடிக்க சாய் பல்லவி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. சாய்பல்லவி மேக்கப் போடுவதை விரும்புவது இல்லை, இயற்கையான அழகையே நம்புகிறார். தனது முகத்தில் இருக்கும் பருக்களை கூட மறைக்க முயற்சிக்கவில்லை அவர் முகத்துக்கு பருக்கள் மேலும் அழகு சேர்த்ததாக ரசிகர்கள் பாராட்டினர். எனவே செயற்கை அழகு பொருட்களை விளம்பரப்படுத்தும் படங்களில் நடிப்பதில்லை என்பதை கொள்கையாக வைத்து இருப்பதாகவும் எனவே அந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்றும் சொல்லி அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.