ரூ 200 கோடி பட்ஜெட் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி!. வெளிவந்த படப்பிடிப்பு தேதி.

நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். தற்போது இவர் ரூ 200 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்க, அமிதாப் பச்சன், சுதீப்புடன் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஐதராபாத்தில் பிரமாண்டமாக தொடங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்படம் தான் அடுத்த வருடம் இந்திய ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படமாக இருக்கும்.