ரூ. 46 லட்சம் மோசடி: பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா மீது வழக்கு!

பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா மற்றும் 3 பேர் மீது மொராதாபாத்தை சேர்ந்த இந்தியா ஃபேஷன் அன்ட் பியூட்டி நிறுவனத்தின் உரிமையாளர் பிரமோத் சர்மா போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது, என் நிறுவன நிகழ்ச்சியில் நடனம் ஆட சோனாக்ஷி சின்ஹாவுக்கு ரூ. 37 லட்சம் பணம் கொடுத்தோம். பணத்தை வாங்கிக் கொண்டு அவர் நிகழ்ச்சிக்கு வரவில்லை. சோனாக்ஷி வராததால் என் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சோனாக்ஷி வந்து செல்ல, தங்க ஏற்பாடு செய்ததில் ரூ. 9 லட்சம் செலவு செய்தேன். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சோனாக்ஷி மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை மொராதாபாத் டி.எஸ்.பி. கஜ்ராஜ் சிங் உறுதி செய்துள்ளார்.