ரெனினாவுக்கு பிறந்தநாள் பரிசு

நடிகை ரெஜினா கஸ்ஸாண்ட்ரா சிறந்த பிறந்த நாள் பரிசாக  தயாரிப்பாளர்கள் படத்தின் நடிகையின் முதல் தோற்றத்தை வெளியிட்டனர். ரெஜினா கசண்ட்ரா தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்து வருகிறார். நேற்று அவர் தன் பிறந்த நாளை கொண்டாடினார். தற்போது அவர் நடிகர் நானியின் தயாரிப்பில் AWE என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ரெஜினாவின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் ஒரு பெண்ணின் பின்பக்கத்தை போட்டோவாக வெளியிட்டு யார் இது என சர்ப்பிரைஸ் வைத்தார்கள்.

பின்னர் சில மணி நேரத்திற்கு பிறகு அதன் ரியல் லுக் போஸ்டரை வெளியிட்டார்கள். அதில் இருந்தது ரெஜினா தான். முற்றிலும் வித்தியாசமான லுக்கில் இருந்தவரால் ரசிகர்களுக்கு இது கொஞ்சம் ஷாக்காக இருந்தது.