லண்டன் காதலரை பிரிந்தார் நடிகை ஸ்ருதிஹாசன் !

தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் குறுகிய காலத்தில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் ஸ்ருதிஹாசன். இவருக்கும், லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்செல்லுக்கும் காதல் மலர்ந்தது. லண்டனில் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது சந்தித்து காதல்வயப்பட்டனர். இந்தியாவுக்கு அழைத்து வந்து தந்தை கமல்ஹாசன், தாய் சரிகா ஆகியோரிடம் அறிமுகப்படுத்தினார். திருமண நிகழ்ச்சியொன்றில் மைக்கேல் பட்டு வேட்டியும் சுருதிஹாசன் பட்டு சேலையும் அணிந்து கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி நெருக்கத்தை உறுதிப்படுத்தின. ஸ்ருதிஹாசன் சில வருடங்களாக புதிய படங்களில் நடிக்கவில்லை. எனவே இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் மைக்கேல் காதலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தற்போது பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் இத்தகவலை ட்விட்டரில் உறுதிசெய்தார்கள். ஸ்ருதிஹாசன் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி உள்ளார். விஜய்சேதுபதி ஜோடியாக புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.