லூசிபர் படத்திற்கு எதிர்ப்பு !

மோகன்லால், பிருதிவிராஜ், மஞ்சுவாரியர் ஆகியோர் நடித்துள்ள மலையாள படம் லூசிபர். இந்த படத்தை பிருதிவிராஜ் டைரக்டு செய்துள்ளார். லூசிபர் கேரளாவில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் பல தியேட்டர்களில் திரையிட்டுள்ளனர். படத்தில் மோகன்லால் சண்டை காட்சிகளில் அதிரடி காட்டி இருப்பதாக அவரது ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். மோகன்லால் செருப்பு அணிந்த காலுடன் போலீஸ் அதிகாரியின் மார்பில் மிதிப்பதுபோன்ற காட்சி படத்தில் உள்ளது. இதை சுவரொட்டிகளாக அச்சிட்டும் கேரளாவில் ஒட்டி உள்ளனர். இதனை கேரள போலீஸ் சங்கம் கண்டித்து முதல்-மந்திரியிடம் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில், மக்கள் மத்தியில் போலீசார் மீது அவப்பெயரை ஏற்படுத்துவதுபோல் இந்த காட்சி உள்ளது. முன்பு குற்றவாளிகளே போலீஸ் மீது கைவைக்க பயந்தனர். தற்போது பொதுமக்கள்கூட போலீசை தாக்க அஞ்சாத நிலை உள்ளது. இந்த மாதிரி படங்கள் இளைஞர்கள் மனதை கெடுத்து போலீசை தாக்க தூண்டிவிடுகின்றன. புகையிலை, மது அருந்துவது தவறு என்று படத்தில் வாசகம் இருப்பதுபோல், போலீசாரை தாக்குவது தவறு என்ற வாசகமும் இடம்பெற வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.