லைக்கா நிறுவனத்துடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன் !

சிவகார்த்திகேயனின் 17வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அதை லைகா நிறுவனம் தயாரிக்கிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. தற்போது இந்த படத்திற்கான கதை விவாதம் மற்றும் நடிகர் நடிகைகள் யார் என்ற விவாதம் பேச்சு வார்த்தையில் உள்ளதாம். சிவாவும் விக்னேஷ் சிவனும் பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை நடிக்க வைக்கலாம் என்ற யோசனையில் உள்ளனர் என்று சொல்லப்படுகிறது. தோனி பையோபிக்கில் சாக்‌ஷி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கியாரா அத்வானி, அதனை அடுத்து பல சர்ச்சை படங்களில் நடித்து வருகிறார்.