லோகேஷ் கனகராஜை கைக்குள் போட்டுக்கொண்ட விஜய்

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, தற்போது நம்பர் ஒன் வியாபாரம் கொண்டுள்ள நடிகராக மாறி உள்ளார் தளபதி விஜய். அதற்கு காரணம் சுறா படத்திற்கு பிறகு ஒரே மாதிரி கதைகளை செய்யக்கூடாது என்பதை உணர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததால் தற்போது இந்த உயரத்தில் உள்ளார். தளபதி விஜய்யின் இந்த வளர்ச்சிக்கு அட்லீயின் பங்கு அளப்பறியது. வியாபார ரீதியாக துப்பாக்கி படத்திற்கு பிறகு அட்லீ இயக்கிய தெறி படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் வெளிவந்த மெர்சல், பிகில் போன்ற படங்களும் வியாபாரங்களிலும் வசூல்களிலும் புதிய உச்சத்தை தொட்டது. இருந்தும் பிகில் படம் கதை ரீதியாக கொஞ்சம் சொதப்பலாக இருந்ததாக வந்த கருத்துக்கள் விஜய்யின் காதுக்கு சென்றுள்ளது. இதனால் கதையுடன் மாஸ் படங்களை எடுக்கும் இயக்குனர்களை தேட ஆரம்பித்தார். அப்படி தளபதி விஜய்க்கு கிடைத்தவர்தான் லோகேஷ் கனகராஜ். கைதி என்ற மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி வருகிறார். தயாரிப்பாளர்களுக்கு தேவையில்லாத செலவை வைக்காமல் குறித்த நேரத்தில் படத்தை எடுக்கும் திறமையை கண்டு வியந்து போன விஜய் தற்போது சன்பிக்சர்ஸ் இடம் லோகேஷ் கனகராஜை அடுத்த படத்துக்கு கமிட் செய்யலாமா என ஆலோசித்து கொண்டு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே சூரரைப்போற்று சுதா கொங்கரா இந்த லிஸ்டில் இருப்பதால் லோகேஷ் கனகராஜ் அனேகமாக அடுத்த படத்தை இயக்கலாம் எனவும் தெரிகிறது. அந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பதற்கு அளவுக்கதிகமான வாய்ப்புகள் இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.