வசனங்களைக் கண்கள் மூலமாக வெளிப்படுத்துவார் ! என மாதவன் கூறியது யார்?

மாதவன் இந்தியத் திரைப்பட நடிகர், படத்தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். தற்போது 'விக்ரம் வேதா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த அனுபவம் பற்றி மாதவன் கூறியிருப்பதாவது. “விஜய் சேதுபதியின் ‘வேதா' கதாபாத்திரத்தை என்னால் செய்ய இயலாது. அவருடைய நடிப்பைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. ரொம்ப இயல்பாக நடிக்கிறார், புத்திசாலியான நடிகர். சில வசனங்களைக் கண்கள் மூலமாக வெளிப்படுத்துகிறார். அவரை ஏன் ‘மக்கள் செல்வன்’ என்று தமிழகத்தில் அழைக்கிறார்கள் எனப் புரிந்துகொண்டேன். ரசிகர்களுடன் அவரின் அணுகுறை ஆச்சரியமாக இருக்கிறது,” என மாதவன் தெரிவித்துள்ளார்.