வடசென்னைக்கு ஆஸ்காரும் இல்லை தேசிய விருதுமில்லை – தனுஷ் ரசிகர்கள் ஏமாற்றம் !

வட சென்னை’ படம், ஆஸ்கார் போட்டிக்கு இந்தியா சார்பில் அனுப்பப்படும் பட்டியலில் இடம் பெற்று இருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில், ‘கல்லீபாய்’ என்ற படம் ஆஸ்கார் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இது, தனுஷ் ரசிகர்களுக்கு பெரிய அளவில் ஏமாற்றத்தை அளித்தது. தேசிய விருதுக்காவது, ‘வட சென்னை’ தேர்வு செய்யப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அதுவும் ஏமாற்றத்தில் முடிந்தது. அதனால் தனுஷ் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.