வட சென்னையை மையமாக வைத்து மற்றுமொரு படம் !

வட சென்னையை மையமாக வைத்து இதற்கு முன்பு பல படங்கள் வந்துள்ளன. இப்போதும் சில படங்கள் தயாரிப்பில் உள்ளன. அந்த படங்களின் கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தாதாக்களின் கதை இது. படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்கிருக்கிறார் பூபதிராஜா. இதில் கதையின் நாயகனாக ஜெய்வந்த் நடித்து இருக்கிறார். கதைப்படி, வட சென்னையில் 4 தாதாக்கள் உள்ளனர். அதில் ஒரு தாதா, ஜெய்வந்த். 4 தாதாக்களும் மோதிக்கொள்வதும், அதில் யார் இறுதியில் ஜெயிக்கிறார்கள்? என்பது கதை. காட்சிகள் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக சென்னை ராயபுரம், காசிமேடு பகுதிகளில் முழு படப்பிடிப்பையும் நடத்தினோம். படம், ஆகஸ்டு வெளியீடாக திரைக்கு வரும்.