வண்டலூர் பூங்காவில் 2 வங்கப்புலிகளை தத்தெடுத்த நடிகர் விஜய் சேதுபதி!

நேற்று உலக வன உயிரின நாளையொட்டி திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி வண்டலூர் பூங்காவுக்கு நேரில் வந்தார். இதனையடுத்து பூங்காவில் உள்ள ஆதித்யா, ஆர்த்தி என்ற 2 வங்கப்புலிகளை 6 மாதத்திற்கு தத்தெடுத்தார். தத்து எடுக்கப்பட்ட இந்த 2 வங்கப்புலிகளுக்கும் 6 மாதத்திற்கு தேவையான உணவுகளை வழங்குவதற்காக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகளிடம் நடிகர் விஜய் சேதுபதி வழங்கினார். இந்த பூங்காவில் விலங்குகளை பார்க்கும்போது மனதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. பொதுமக்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வருகை தந்து இங்கு உள்ள விலங்குகளை பார்த்தால் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை நேரடியாக இணையதளம் மூலம் அனைவரும் காண முடியும், பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும் தங்களால் முடிந்த அளவுக்கு சிறு தொகையை கொடுத்து விலங்குகளை தத்தெடுத்து வளர்க்க உதவி செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.