வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் பிரபாஸ் !

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் அனுஷ்காவும், பிரபாசும் ஜோடியாக நடித்து இருந்தனர். அப்போதிருந்தே இருவரையும் இணைத்து பேச ஆரம்பித்தனர். அவர்கள் மறுப்பு தெரிவித்த பிறகும் ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில் அனுஷ்காவை காதலிப்பதாக பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த பிரபாஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில் அனுஷ்காவும், நானும் சில படங்களில் சேர்ந்து நடித்தோம். அப்போது எங்களுக்குள் நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டது. 11 வருடங்களாக இந்த நட்பு நீடிக்கிறது. மற்றவர்கள் நினைப்பதுபோல் இது காதல் இல்லை. எங்களுக்குள் காதல் இருந்தால் அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் இருவரில் ஒருவருக்கு திருமணம் ஆவதுவரை இந்த வதந்திகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் என கூறியுள்ளார்.