வரலட்சுமியால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை ஹன்சிகாவுக்கும்!

தமிழ் படங்களில் பிசியாக இருக்கும் வரலட்சுமி சரத்குமார் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார். சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ., பி.எல். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் வரலட்சுமி. நாகேஸ்வர ரெட்டி இயக்கும் இந்த படத்தின் ஹீரோயின் ஹன்சிகா. வரலட்சுமி எந்த படத்தில் நடித்தாலும் ஹீரோயினை ஓரங்கட்டிவிட்டு தன்னை பற்றி பேச வைத்துவிடுவார். சண்டக்கோழி 2, சர்கார் ஆகிய படங்களில் ஹீரோயின் கீர்த்தியை யாரும் கண்டு கொள்ளவில்லை. மாறாக வில்லியாக நடித்த வரலட்சுமி பற்றி தான் ரசிகர்கள் அதிகம் பேசினார்கள். இதனால் கீர்த்திக்கு வருத்தம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் சந்தீப் கிஷன் படத்தில் நிச்சயம் ஹன்சிகாவை விட வரலட்சுமி அதிகம் பேசப்படுவார்.