வரல வரலைன்னு சொல்லியே வந்துட்டாங்கய்யா – வைல்ட் கார்டு என்ட்ரியில் கஸ்தூரி

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நடந்து வருகிறது. 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 16 பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர். அதில் பாத்திமா பாபு, நடிகை வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா ஆகிய 5 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வார தொடக்கத்தில் நடிகர் சரவணன் சில காரணங்களால் அதிரடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், பிரபல நடிகையான கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். சரவணன் திடீரென வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது கஸ்தூரி வைல்ட் கார்டு மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் பற்றி வெளியிலிருந்து விமர்சனம் செய்துகொண்டே இருந்தார் கஸ்தூரி. அவர் போன சீசனிலிருந்தே கலந்துகொள்வார் ஏன் எதிர்பார்க்கப்பட்டது. இந்த சீசனிலும் தொடர்ந்தது இதனை கஸ்தூரி மருத்துவந்த வேலையில் இப்பொழுது  வைல்ட் கார்டு என்ட்ரியில் அவர் வருவது போன்று பிரமோ வெளியாகியுள்ளது. வரல வரலைன்னு சொல்லியே வந்துட்டாங்கய்யான்னு இணையதளவாசிகள் கிண்டலடித்துள்ளனர்.