வருகிறது ஜேம்ஸ் பாண்ட் 25 வது படம் ‘நோ டைம் டு டை – டீஸர் வெளியீடு !

ஜேம்ஸ் பாண்ட் படங்களின் வரிசையில் டேனியல் கிரேக் நடிக்கும் புதிய படத்திற்கு நோ டைம் டூ டை என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தப் படம் வெளியாகிறது. ஜேம்ஸ்பாண்ட் படங்களின் வரிசையில் இது 25-வது படமாகும். ஜமைக்காவில் இதற்கான படப்பிடிப்பு நடைபெறுகிறது. ஆஸ்கர் விருது பெற்ற ராமி மாலேக் இப்படத்தின் வில்லனாக நடிக்கிறார்.