Cine Bits
வருடத்திற்கு ஒரு தென்னிந்திய மொழி படத்தில் நடிக்கப்போவதாக முடிவு – டாப்சி !

தமிழ், தெலுங்கில்தான் அதிக படங்களில் நடித்தேன். சிறந்த நடிகையாக என்னை அடையாளப்படுத்தியதும் தென்னிந்திய பட உலகம்தான். ஆனால் எனக்குள் இருக்கிற நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்தது இந்தி படங்கள். இந்தி பட உலகில் ஓய்வில்லாமல் இருந்ததால் தமிழ், தெலுங்கில் நடிக்க முடியவில்லை. தென்னிந்திய மொழி படங்களில் நான்தான் முதன்மை கதாபாத்திரமாக இருக்கிறேன். திரைக்கதை பிடித்தால் என்னுடைய முடிவுப்படி கால்ஷீட்டை ஒதுக்கி படப்பிடிப்புக்கு செல்வதை திட்டமிட்டு கொள்கிறோம். அதனால் நடிகர்கள் கால்ஷீட்டுக்காக எனது தேதிகளை ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. இனிமேல் இதுமாதிரி திட்டமிட்டு தமிழ், தெலுங்கில் ஆண்டுக்கு ஒரு படம் நடிக்க போகிறேன் இவ்வாறு டாப்சி கூறினார்.