வருடம் முழுவதும் இலவச உணவு – விஜயின் நேரடி பார்வையில் !

நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி தினமும் இலவச உணவு வழங்கும் விதமாக விலையில்லா விருந்தகம் கடலூரில் துவங்கப்பட்டது. ஏழை, எளிய மக்களுக்கு ஒரு வருடம் முழுவதும் விலையில்லாமல் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வட சென்னை, புதுக்கோட்டை, மதுரை, சேலம், நாமக்கல் ஆகிய பகுதிகளில் திறக்கப்பட்ட இந்த விருந்தகம் தற்போது கடலூரில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் பேசிய விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொறுப்பாளர் ஆனந்த்,  விஜய் இந்த திட்டத்தை நேரடியாக கண்காணித்து வருவதாக கூறினார். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதை தவிர, வேறு எதும் உள்நோக்கமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.