“வர்மா” படத்தில் நடிக்க மறுத்த கவுதமி மகள்…

பாலா இயக்கத்தில் “வர்மா” படத்தில் விக்ரம் மகன் துருவ் நடிக்கிறார். இயக்குனரின் அறிவுரைப்படி தாடியும், நிறைய முடியும் வளர்த்து தோற்றத்தை மாற்றி இருக்கிறார், அதுமட்டுமின்றி நடிப்பு, நடன பயிற்சிகளும் பெற்று வருகிறார் துருவ். இந்த படத்திற்கு கதாநாயகி தேர்வு நடந்தது அதில் சில்லுனு ஒரு காதல் படத்தில் குழந்தை நட்சத்திரமா வந்த ஷ்ரியா சர்மாவை பரிசீலித்தனர். பின்னர் அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தின் கதாநாயகியான ஷாலினி பாண்டே பெயர் அடிபட்டது. தற்போது கவுதமி மகள் சுப்புலட்சுமி பெயர் வந்தது. ஆனால் இதற்கு கவுதமி டுவிட்டரில் “எனது மகள் நடிக்கப்போவதாக வெளியான செய்திகள் தவறானது. அவர் சினிமாவில் நடிக்கும் முடிவில் இல்லை, படிப்பில் கவனம் செலுத்துகிறார். வாழ்த்தியவர்களுக்கு நன்றி” என்று கூறியுள்ளார். எனவே இந்த படத்திற்கு கதாநாயகி கிடைக்கவில்லை.