வர்மா படம் பெயர் மாற்றம் – ஆதித்ய வர்மா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

வர்மா படத்தின் பெயரை ஆதித்ய வர்மா என்று மாற்றியுள்ளனர். படத்தை கிரிசய்யா இயக்குகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான வர்மா மீண்டும் முதலில் இருந்து எடுக்கப்படுகிறது. இம்முறை த்ருவ் விக்ரமுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பனிடா சந்து நடிக்கிறார்.படத்திற்கு ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.வர்மா படம் குறித்து இன்று மாலை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்கள். அதன்படி அறிவிப்புடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. படத்தின் பெயரை ஆதித்ய வர்மா என்று மாற்றியுள்ளனர். போஸ்டரில் த்ருவின் லுக் முன்பை விட ஸ்டிராங்காக உள்ளது.