வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்க தடை சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு!

தமிழகத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று கடந்த 2-ந் தேதி சட்டசபையில் தமிழக கவர்னர் அறிவித்தார். அதாவது குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய், கரும்பு ஆகிய பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்புடன், ரூ.1,000 ரொக்கமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழக அரசு ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது. ‘கஜா’ புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு நிவாரண தொகையை கூட முழுமையாக வழங்க முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில் அனைவர்க்கும் பொங்கல் பரிசு தருவது சாத்தியமில்லை எனவே வசதிபடைத்தவர்களுக்கு இந்த ரொக்கப்பரிசு வழங்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால், சர்க்கரை மட்டும் போதும் என்றும், எந்த பொருளும் வேண்டாம் என்றும் கூறி ரேஷன் அட்டை வாங்கியவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமானது.