வலிமை படத்தில் இரு வேடங்களில் அஜித் !

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தில் அஜித் இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு துவங்கும் நாளை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். அஜித் இந்த படத்திற்காக இரு வேறு கெட் அப்களில் உலவருகிறார். இந்நிலையில் விழா ஒன்றில் பங்கேற்ற போனி கபூர் வலிமை படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் வருகிற 13 ம் தேதி துவங்குமென கூறியுள்ளார். இதற்காக பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். படத்தை அடுத்த வருடம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது படக்குழு. தல ரசிகர்களுக்கு அடுத்த தீபாவளி தல தீபாவளியாக இருக்க போகிறது.