வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் பாபி சிம்ஹா நடிக்க தடை – தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் முடிவு !

ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இயக்கி, பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன், சதீஷ் நடிப்பில் வெளியான படம் ‘அக்னி தேவி’. இந்த படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக பாபி சிம்ஹா ஒரு புகார் கூறினார். தான் டப்பிங் பேசவே இல்லைஎன்றும் தான் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், எனக்கு டூப் போட்டு எடுத்த காட்சிகளை படத்தில் சேர்த்துள்ளார்கள் என்று கூறினார். படக்குழுவினர் மீது கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார். இந்த பிரச்சினை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. படத்தின் மீது பாபி சிம்ஹா போட்டுள்ள மொத்த வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும். படத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு பாபி சிம்ஹா ஏதேனும் ஒரு வகையில் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் கூறியிருக்கிறார்கள். இதில் எதற்குமே ஒத்துழைக்க முடியாது என்று கூறிவிட்டு பாபி சிம்ஹா வெளியேறி இருக்கிறார். தயாரிப்பாளருக்கோ ரூ.10 கோடி வரை நஷ்டம் பேசி தீர்க்கலாம் என்று முயற்சி செய்தோம். ஆனால் யார் என்ன சொன்னாலும் பாபி சிம்ஹா அவருடைய வி‌ஷயத்தில் இருந்து பின்வாங்கவே இல்லை. எதற்குமே ஒத்துழைக்கவில்லை என்றால், அவரை வைத்துப் படம் தயாரிக்க அனைவருமே யோசிப்பார்கள். அடுத்த வாரத்தில் ஒரு கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் அனைத்து தயாரிப்பாளர்களையும் வரவைத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம். பாபி சிம்ஹா தமிழ் சினிமாவில் நடிக்க தடை விதிக்கலாமா என்றும் ஆலோசித்து வருகிறார்கள்.