வாய்ப்பிருந்தால் நல்ல கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன் – இயக்குனர் சுசீந்திரன் !

வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை, ராஜபாட்டை, பாண்டிய நாடு, ஜீவா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சுசீந்திரன் ‘சுட்டு பிடிக்க உத்தரவு’ படம் மூலம் நடிகராகி உள்ளார். நடிகரான அனுபவம் பற்றி அவர் கூறியதாவது, சுட்டு பிடிக்க உத்தரவு படத்தில் நல்ல கதாபாத்திரம் அமைந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதில் எனக்கு ஓடுவது மட்டுமே சவாலாக இருந்தது. படம் வெளியான பிறகு எனது நடிப்பை பலரும் பாராட்டியது மகிழ்ச்சியாக இருந்தது. நல்ல கதை மற்றும் வித்தியாசமான கதாபாத்திரம் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன். இயக்குனர் தொழிலில் உச்சத்தை இன்னும் நான் அடையவில்லை. அதை தொட்டபிறகு நடிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவேன். ‘சுட்டு பிடிக்க உத்தரவு’ படத்தில் தன்னை நடிகராக அறிமுகப்படுத்திய இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பாவுக்கு சுசீந்திரன் தங்கச் சங்கிலி பரிசளித்து நன்றி தெரிவித்தார்.