வாய்ப்பு கிடைத்தால் அஜித்துடன் மீதும் சேர்ந்து நடிக்க ஆசை – வித்யா பாலன் !

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி அதாவது நாளை ரிலீஸ். படத்திற்கான எதிர்ப்பார்ப்பு படு உச்சத்தில் உள்ளது. ரீமேக் என்றாலும் கதையின் கரு மாறாமல் கொஞ்சம் வித்தியாசமான காட்சிகளுடன் வினோத் இயக்கியிருப்பதாக பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இப்படத்தில் சின்ன வேடத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை வித்யா பாலன். அவர் ஒரு பேட்டியில் அஜித்தை புகழ்ந்து பேசியுள்ளார், சினிமாவை தாண்டி குடும்பம் போன்ற விஷயங்கள் பேசினோம். அஜித் நன்றாக பிரியாணி சமைப்பார் என்று கேள்விப்பட்டேன், இந்த படத்தில் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை, மற்றொரு படம் நாங்கள் செய்யும் போது கண்டிப்பாக அவரது சமையல் சாப்பிடுவேன் என்று கூறினார்.