வாரிசுகள் சினிமாவில் ஜொலிப்பது அவ்வளவு எளிதல்ல -பாக்யராஜ் !

சமீபத்தில் நடந்த படவிழாவில் பாக்யராஜ் பேசியது, அரசியல் வாரிசுகள் சுலபமாக வந்து விடுகிறார்கள். ஆனால் சினிமாவில் வாரிசுகள் சுலபமாக வெற்றிபெற முடியவில்லை. எனது மகன் சாந்தனு, பாண்டியராஜ் மகன் பிரித்வி ஆகியோரை குறிப்பிட்டுத்தான் இதை நான் பேசுகிறேன்” என்றார். விக்ரம் பிரபு முன்னணி கதாநாயகனாக வரவேண்டியவர். என்ன காரணத்தினாலோ அந்த இலக்கை இன்னும் அடையவில்லை. அவர் மேலும் உயரவேண்டும் என்று விரும்புகிறேன்.