விக்கி டோனர் படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரிஷ்

“பியார் பிரேமா காதல்” மற்றும் “இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்” போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹரிஷ் கல்யாண். தமிழ் திரையுலகின் சாக்லேட் பாய் லிஸ்டில் இடம்பெற்றுள்ள இவர், தற்போது அறிமுக இயக்குனர் சஞ்சய் பாரதி இயக்கத்தில் “தனுசு ராசி நேயர்களே” படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து இந்தியில் வெளியாகி ஹிட்டான “விக்கி டோனர்” படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரிஷ் நடிக்க உள்ளார். முழுக்க முழுக்க காதலையும், காமெடியையும் மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்க உள்ளார். தற்போது ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக தன்யா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நடிகை தன்யா இதற்குமுன் அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘தடம்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர்.