விக்னேஷ் சிவன் இயக்கம் திரில்லர் படத்தில் நயன்தாரா !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவின் படங்கள் சமீபகாலமாக வெற்றி பெறவில்லை. அஜித்தின் விஸ்வாசம் படமே நயன்தாராவின் கடைசி வெற்றி படமாகும். அதற்கு பிறகு வந்த மிஸ்டர் லோக்கல், ஐரா, கொலையுதிர்காலம், சமீபத்தில் மலையாளத்தில் வெளியான லவ் ஆக்ஷன் டிராமா ஆகிய படங்கள் அனைத்தும் தோல்வி படங்களே. தொடர் தோல்விகளால் செம அப்செட்டில் இருக்கிறார் நயன்தாரா. ரஜினியின் தர்பார், விஜயின் பீகில் இவை இரண்டு படங்களைத்தான் நயன் பெரிதும் நம்பியுள்ளார். நயன்தாராவின் இந்த நிலையை உணர்ந்த அவரது காதலர் விக்னேஷ் சிவன், சொந்தமாக பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அவரை வைத்து படம் எடுக்கும் பணியில் இறங்கியுள்ளார். இந்த கம்பெனிக்கு ரவுடி பிக்சர்ஸ் என பெயர் வைத்துள்ளார் விக்னேஷ் சிவன். இப்படத்திற்கு நெற்றிக்கண் என பெயர் வைத்துள்ளனர். 'அவள்' படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் தான் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இந்த ஆண்டுக்குள் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். கொலையுதிர் காலம் படத்தில் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக நயன் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் முதன்முறையாக அவர் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். இப்படமும் திரில்லர் படமாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.