விக்னேஷ் சிவன் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கும் அஞ்சலி !

நடிகை அஞ்சலி கடைசியாக அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்கிய 'லிசா' என்ற திகில் படத்தில் நடித்திருந்தார். இப்போது 'நாடோடிகள் 2, அருள்நிதி, சீனு ராமசாமியின் படம், காண்பது பொய், ஓ, சைலன்ஸ், கிருஷ்ணன் ஜெயராஜின் படம்’ என பிஸியாக இருக்கிறார். இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் ஒரு புதிய படத்தில் அஞ்சலி கமிட்டாகியிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸிற்காக 4 இயக்குநர்கள் இனைந்து பணியாற்றும் ஆந்தாலஜி திரைப்படம். இதில் விக்னேஷ் சிவன் இயக்கும் பகுதியில் அஞ்சலி ஹீரோயினாக நடிக்கிறார். மற்ற மூன்று கதைகளையும் இயக்குநர்கள் வெற்றிமாறன், சுதா கொங்கரா மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இயக்கவுள்ளனர்.