விக்ரமின் கோப்ரா பட பர்ஸ்ட் லுக் !

நவராத்திரி படத்தில் சிவாஜி கணேசன் 9 வேடங்களில் நடித்தார். தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்தார். அவரைத் தொடர்ந்து இப்போது விக்ரம், கோப்ரா படத்தில் 12 வேடங்களில் நடிக்கிறார். டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்குகிறார். கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பிப்ரவரி 14 -ந் தேதியான காதலர் தினத்தன்று வெளியாகிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கோடை விடுமுறையில் படம் திரைக்கு வருகிறது.