விக்ரமின் துருவநட்சத்திரம் படம்

கெளதம்மேனன் இயக்கும் துருவநட்சத்திரம் படத்தில் விக்ரம் நடிக்கிறார். இந்த இயக்குனர் படத்தின் படப்பிடிப்பை துவங்கிவிட்டு அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்காமல் மாதக்கணக்கில் தாமதம் செய்துள்ளார். விக்ரம் இதனால் ஸ்கெட்ச் படத்தில் நடித்து அந்த படம்  மின்னல் வேகத்தில் திரைக்கு வந்துவிட்டது.  தற்போது அவர் சாமி -2 படத்தில் கால்சீட் கொடுத்து நடித்து வரும் நிலையில் கெளதம்மேனன் துருவநட்சத்திரம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை துவங்கியுள்ளார். இந்த படம் மே 19ம் தேதி வெளியிட திட்டமிட்டிருப்பதால் மீதமுள்ள அனைத்து காட்சிகளையும் நடித்து கொடுத்த பிறகே மீண்டும் சாமி -2 படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறியுள்ளார் விக்ரம்.