விக்ரமிற்கு ஜோடியாக​ மஞ்சிமாமோகன்

தமிழ் சினிமாவில் மஞ்சிமாமோகன் அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.இந்த நிலையில், சிகரம் தொடு இயக்குனர் கெளரவ், உதயநிதியை வைத்து இயக்கும் படத்தில் அடுத்து கமிட்டாகியிருக்கும் மஞ்சிமா, வாலு பட டைரக்டர் விஜயசந்தர், விக்ரமை நாயகனாக வைத்து இயக்கும் படத்திலும் இப்போது கமிட்டாகியிருக்கிறார். இந்த படத்தில் முதலில் கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி, மஞ்சிமாமோகன் ஆகிய மூன்று பேரின் பெயர்களும் பட்டியலில் இருந்த நிலையில், தற்போது மஞ்சிமா மோகன்தான் நடிக்கயிருப்பதாக சொல்கிறார்கள். வட சென்னை கதையில் உருவாகும் இந்த படத்தில் மஞ்சிமா மோகனுக்கு அழுத்தமான வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.