விக்ரமுக்கு நிகராக உடலை ஏற்றும் துருவ் விக்ரம்!

விக்ரம் நடிப்புக்காக தன்னையே அர்பணிப்பவர் என்பது அனைவரும் அறிந்ததே, புலிக்கு பிறந்தவர் பூனையாக இருப்பாரா என்ன, தானும் அப்பாவிற்கு சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார் அவரது மகன் துருவ். தற்போது விக்ரம் உடலுக்கு நிகராக இவரது மகன் துருவ் விக்ரம் உடலை ஏற்றி வருகிறார். துருவ் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் விக்ரமின் உடலுக்கு நிகராக உங்கள் உடம்பு உள்ளது என்று கூறி வருகிறார்கள். துருவ் விக்ரம் நடிப்பில் தற்போது ‘வர்மா’ திரைப்படம் உருவாகியுள்ளது. பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.