Cine Bits
விக்ரம்-கெளதம்மேனன் கூட்டணி ஜனவரியில் ஆரம்பம்!
கெளதம்மேனன், தனுஷை வைத்து இயக்கிக் கொண்டிருக்கும் படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. அந்த படம் 50% மேல் படமாக்கப்பட்ட நிலையில் சில மாதங்களாகவே என்னை நோக்கி பாயும் தோட்டா பட வேலைகளில் ஈடுபட்டிருந்த கெளதம்மேனன், விக்ரமிற்காக ஒரு கதையையும் ரெடி பண்ணிக்கொண்டிருந்தார். அந்த ஸ்கிரிப்ட் வேலைகள் தற்போது முடிந்து விட்டதாகவும்.
அதனால், விக்ரம் நடிக்கும் அந்த படத்தின் படப்பிடிப்பை ஜனவரி 2-ந்தேதியில் இருந்து 27-ந்தேதி வரை குன்னூரில் படப்பிடிப்பு நடத்த உள்ளார்.அதன்பிறகு ஏப்ரல் மாதம் மறுபடியும் விக்ரமை இயக்குகிறார் கெளதம்மேனன். அப்போது மொத்தம் 40 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளனர்.