விக்ரம் படத்தில் அனிருதா?

ரெமோ படத்தின் ஹிட்டுக்குப்பிறகு அனிருத்தின் கைவசம் ஆறு படங்கள் உள்ளன. இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருப்பதால், பாடல் பின்னணி இசையமைக்கும் வேலைகளில் பிசியாக​ உள்ளார்.அதனால் யாராவது புதிய படங்கள் சம்பந்தமாக அவரை சந்திக்க சென்றால், யாரையும் சந்திக்க நேரமில்லை என்று கூறி விளகிச்செல்கிறார் அனிருத்.

இந்நிலையில், வாலு பட டைரக்டர் விஜயசந்தர், விக்ரமை வைத்து இயக்கும் படத்திற்கு இசையமைக்க சில இசையமைப்பாளர்களின் பெயர்கள் பரிசீலணையில் இருந்து வந்த நிலையில், தற்போது அனிருத்தை இசையமைக்க வைக்கலாம் என்று அவரை அணுகியுள்ளனர்.ஆனால் அவரோ, கைவசம் பல படங்கள் இருப்பதால், நீங்கள் கேட்ட நேரத்தில் என்னால் பாடல் தர முடியாது. ரொம்ப பிசியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.இருப்பினும், அவரை இசையமைக்க வைத்தே தீருவது என்று அப்படக்குழுவினர் முடிவுசெய்துள்ளனர்.