விக்ரம் பிரபு முதல் தயாரிப்பு ‘நெருப்புடா’ ‘யு’ சான்றிதழ் கிடைத்தது

நடிகர் பிரபுவின் மகன் நடிகருமான விக்ரம் பிரபு, 'ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்' என்ற சொந்த பட நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்புதான் 'நெருப்புடா'.  இயக்குநர் லட்சுமணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அசோக் குமார் என்ற அறிமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இந்தப் படத்தில் தீயணைப்பு வீரராக நடிக்கிறார் விக்ரம் பிரபு.

'சத்ரியன்' படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகவிருக்கும் ' நெருப்புடா' படத்தின் தணிக்கை  சமீபத்தில் முடிந்து விட்டது. இந்த' படத்திற்கு தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்தது..