விக்ரம் மகன் துருவ் விக்ரம் அதிகரிக்கும் பெண் ரசிகைகள் !

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் ஆதித்ய வர்மா படம் நவம்பர் 8ந்தேதி ரிலீஸ் ஆகிறது. ஆனாலும் தற்போதே துருவ் விக்ரமிற்கு அதிக அளவில் ரசிகர்கள் சேர்ந்துவிட்டார்கள். குறிப்பாக துருவ்வுக்கு இளம் ரசிகைகள் அதிகமாகி உள்ளனர். இந்த நிலையில் துருவ் மீது தனக்கு ஈர்ப்பு இருப்பதாக பிரபல மலையாள நடிகை பிரியா வாரியர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். ஒரு அடார் லவ் மலையாள படத்தில் கண்ணடித்து பிரபலமான நடிகை பிரியா பிரகாஷ் வாரியருக்கு ஜோடியாக ரோஷன் நடித்திருந்தார்.