விக்ரம் வேதா படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை!

மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விக்ரம் வேதா படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது . ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தபிறகு தியேட்டரில் கூட்டம் குறைந்திருந்தது, ஆனால் இப்படத்தின் ரசிகர்களை மீண்டும் திரையரங்கிற்கு வரவைத்துள்ளதாக சினிமா துறையை சேர்ந்த பலரும் கூறிவருகின்றனர். இந்நிலையில் இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை தற்போது துவங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதில் விக்ரமாக ராணா மற்றும் வேதாவாக நடிகர் வெங்கடேஷ் ஆகியோருடன் தற்போது பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இடை பற்றி விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.