விக்ராந்துக்கு திரைக்கதை எழுதும் விஜய் சேதுபதி!

சுட்டு பிடிக்க உத்தரவு, பக்ரீத் படங்களில் நடித்து வருகிறார் விக்ராந்த். அவர் அடுத்த நடிக்க உள்ள படத்தை புதியவர் சஞ்சீவ் இயக்குகிறார். இந்த படத்துக்கு திரைக்கதையை விஜய் சேதுபதி எழுதியுள்ளார். இதற்கு முன் ஆரஞ்சு மிட்டாய் படத்துக்கு விஜய் சேதுபதி திரைக்கதையை எழுதியிருந்தார். அந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். ஆனால் அவர் நடிக்காத படத்துக்கு அவர் ஸ்கிரிப்ட் எழுதுவது இதுதான் முதல்முறை. இந்த படத்தில் விக்ராந்துடன் கெஸ்ட் ரோலில் விஷ்ணு விஷால் நடிப்பார் என கூறப்படுகிறது. படத்தின் தலைப்பு, ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை.