விஜயசேதுபதிக்கு ஜோடியான சமந்தா! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தனுசுடன் தங்கமகன் படத்தில் நடித்த சமந்தா, அதன்பிறகு வெற்றிமாறன் இயக்கி வரும் வடசென்னை படத்திலும் தனுசுக்கு ஜோடியாக நடிக்கயிருந்தார். ஆனால், அந்த நேரம் பார்த்து சமந்தா-நாகசைதன்யா திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிகள் நடைபெற்றதால், வடசென்னை படத்தில் இருந்து சமந்தா விலகியதாகவும், இனிமேல் அவர் புதிய படங்களில் கமிட்டாக மாட்டார் என்றும் கூறப்பட்டது. அதனால் வடசென்னையில் சமந்தா வேடத்துக்கு அமலாபால் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
இந்நிலையில், எதிர்பாராதவிதமாக மீண்டும் நடிக்க வந்துள்ள சமந்தா, விஷாலுடன் இரும்புத்திரை படத்தில் ஒப்பந்தமான நிலையில், அடுத்தபடியாக ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாசிலும் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார். மேலும், இந்த படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக் கும் ஒரு படத்திலும் சமந்தா ஒப்பந்தமாகியிருப்பதாக சொல்கிறார்கள்.