விஜயின் மெர்சல் காட்சி நீக்கம் பற்றி கமல் அதிரடி ட்வீட்!

தளபதி விஜய்யின் மெர்சல் படத்திற்க்கு எழுந்துள்ள எதிர்ப்பு பற்றிதான் தேசிய டிவி சேனல்கள் உட்பட அனைவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். சென்சார் செய்யப்பட்ட படத்தின் காட்சியை நீக்க சொல்வது சரியல்ல என பலரும் பாஜகவிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது கமல்ஹாசன் விஜயின் மெர்சல் படத்தை பற்றி கமல் கூறியது, “மெர்சலுக்கு சென்சார் சான்றிதழ் கொடுக்கப்பட்டுவிட்டது. மீண்டும் சென்சார் செய்யவேண்டாம். விமர்சனம் செய்பவர்களை ஒடுக்க நினைக்க வேண்டாம். விமர்சனம் இருந்தால் தான் இந்தியா ஒளிரும்” என கமல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.