விஜயின் 62 படத்தின் படப்பிடிப்பு!!!.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி, துப்பாக்கி படங்களுக்கு பிறகு விஜயின் 62 வது படத்தில் இருவரும் இணைந்துள்ளனர். இதில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். யோகி, சோலோ காமெடியனாக நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.  கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகவும் இருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரின் தனியார் சொகுசு விடுதியில்  விஜய் கிளாப் அடித்து துவங்கி வைத்தார். இதில் கீர்த்தி,விஜய் தொடர்பான காட்சிகள் எடுக்கப்பட்டது. இந்த படம் தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது.