விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் ராக்ஷி கண்ணா !

விஜய் நடித்து வரும் ‘பிகில்’ படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் இரட்டை வேடங்களில் வருகிறார். ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. அட்லி இயக்கும் இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இது விஜய்க்கு 64-வது படமாகும். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி உள்ளன. இதில் கதாநாயகியாக நடிக்க 2 நடிகைகளிடம் இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களில் ஒருவர் ராஷி கண்ணா. இவர் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்கியா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது சங்கத்தமிழன், கடைசி விவசாயி படங்களில் நடித்து வருகிறார்.