Cine Bits
விஜய்க்கு மெழுகு சிலை நிறுவிய அவரது ரசிகர்கள் !

நடிகர் விஜய்க்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியதில்லை. சமீபத்தில் வெளியான அவரது பிகில் படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்க்கும் அதிகம் வசூலித்து சாதனை செய்துள்ளது.
இந்நிலையில் விஜய்க்கு கன்னியாகுமரியில் உள்ள ஒரு மியூசியத்தில் ஒரு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. அது அச்சு அசல் விஜய் போலவே இருக்கிறது என ரசிகர்கள் கூறுகின்றனர். அதனுடன் பலரும் நின்று போட்டோவும் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.