விஜய்க்கு வில்லனாகிறார் விஜய் சேதுபதி – தளபதி 64 அப்டேட் !

எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் எஸ்.சேவியர் பிரிட்டோ தயாரிக்க, விஜய் நடிக்கும் 64வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். மாநகரம், கைதி ஆகிய படங்களின் இயக்குனர் இவர். சத்யன்  சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். ஜெகதீஷ், லலித்குமார் இணை தயாரிப்பு செய்கின்றனர். வரும் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் படம் வெளியாகிறது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், அதற்கு அவர் சம்மதித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.