விஜய்சேதுபதிக்கு வில்லனாகும் போஸ் வெங்கட்

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா செபாஸ்டியன் நடித்து வரும் 'கவண்' படத்தின் வில்லன் குறித்ததகவல் வெளியாகியுள்ளது. இப்படதில் திரைபட​ மற்றும் டெலிவிஷன் நடிகர் போஸ் வெங்கட் மெயின் வில்லனாக​ முடிவுசெய்துள்ளனர். இந்த படத்தில் போஸ் வெங்கட் 55 வயது அரசியல்வாதியாக நடித்துள்ளதாகவும் இந்த படத்திற்காக உடல் எடையை அதிகரித்ததோடு, மொட்டையும் அடித்துள்ளதாகவும் படக்குழுவினர்கள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.