விஜய்சேதுபதிக்கு வில்லனாகிறார் இயக்குனர் மகிழ் திருமேனி !

தடம்', 'தடையற தாக்க' படங்கள் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் மகிழ் திருமேனி முதல் முறையாக இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பிற்கு அவர் தமிழில் குரல் கொடுத்திருந்தார். அவரது குரலுக்கு பல பாராட்டுக்கள் கிடைத்தது. அதனால் ஈர்க்கப்பட்ட இயக்குநர் தன் படத்தில் வில்லனாக நடிக்க அவரை வற்புறுத்தியுள்ளார். முதலில் நடிக்க மறுத்தவர் இயக்குநரின் தொடர் வற்புறுதலுக்குப் பின் கதை கேட்டுள்ளார். கதை அவருக்கு பிடித்து விடவே, உடனடியாக நடிக்க சம்மதித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு எதிரான வில்லனாக மகிழ் திருமேனியை பார்க்க சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் ஆவலாக உள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதி இசைக்கலைஞராக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கி உள்ளது.