விஜய்சேதுபதி, கார்த்தி, பிரியாமணி, பிரபுதேவா உள்ளிட்ட 201 பேருக்கு கலைமாமணி விருது…!

இயல், இசை, நாட்டியம், நாடகம், கிராமியம், திரைத்துறை மற்றும் சின்னத்திரை போன்ற பல்வேறு பிரிவுகளில், தமிழக அரசால் வழங்கப்படும் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, பிரபுதேவா, சந்தானம், பிரசன்னா, சரவணன், ராஜீவ், பாண்டு உள்ளிட்டோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நடிகைகள் பிரியா மணி, நளினி மற்றும் பழம்பெரும் நடிகைகள் குமாரி காஞ்சனா தேவி, சாரதா ஆகியோரும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எழுத்தாளர்கள் லேனா தமிழ்வாணன், வாசுகி கண்ணப்பன், புலவர் புலமைப்பித்தன், கவிஞர் சுப்பு ஆறுமுகம், பின்னணி பாடகி எஸ்.ஜானகி, பாம்பே சகோதரிகள் உள்ளிடோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விரைவில் நடைபெறவுள்ள விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கவுள்ளார்.