விஜய்சேதுபதி படத்தில் கதாநாயகியாக மஞ்சிமா மோகன் ஒப்பந்தம் !

விஜய்சேதுபதி துக்ளக் தர்பார் என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுதுகிறார். 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க அதிதி ராவ் ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார். இந்நிலையில் இந்தப் படத்தில் நடிக்க நடிகை மஞ்சிமா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார். இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.